தமிழகத்தில் அடுத்து குலாப் புயல் உருவாகிறது
இந்த ஆண்டு குலாப் புயல்உருவாகிறது ? தமிழகத்தில் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பே இன்று வரை முடிவுக்கு வரவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா - ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது. தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையே கலிங்கப்பட்டினத்தில் நாளை மாலை ...