சென்னையில் பட்டப்பகலில் தாம்பரம் ரயில்நிலையத்தில் காதலித்த பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை

 

 

சென்னை: தாம்பரம் ரயில்நிலைத்தில் மக்கள் மத்தியில் காதலித்த பெண்ணைக் கத்தியால் குத்தி தானும் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டார்.

                  குரோம்பேட்டை பாரதிபுரம் , ரவி நகரத்தை சேர்ந்த மாநில போக்குவரத்து ஓட்டுனர் மதியழகன் ,50. மதியழகன் மகள் ஸ்வேதா ,19  கிழக்கு தாம்பரம் அருகில் தனியார் கல்லூரியில்  மருத்துவ‌ ஆய்வக தொழில்நுட்பம் பயிலும் மாணவி.ஸ்வேதா  தனிநபர் ஒருவரிடம் ரயில்நிலையத்தில் பேசி கொண்டு இருந்தார். பிறகு அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்திலும் மார்பிலும் சரமாரியாக குத்தினார். அவர் குத்தியதும் இல்லாமல் தானும் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டார். இருவரும் ரயில்நிலையத்தில் மக்கள் முன்னிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்து இருந்தனர்.

             அங்கு இருந்த மக்கள் அருகில் உள்ள சேலையூர் காவல்துறையிடம் கூறினார்கள்.பிறகு அருகில் இருந்த குரோம்பேட்டை மருத்துவத்தில் இருவரையும் சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் ஸ்வேதாவை பரிசோதித்த டாக்டர், இவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கூறினார்.ஸ்வேதாவை கத்தியால் குத்திய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

                 அவரிடம் போலீசார் விசாரணை செய்யும் போது , அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த  திருக்குளை அடுத்த ஆதமங்கத்தை சேர்ந்த குணசேகரன் மகன் ராமச்சந்திரன் 21 . இவர் பொறியியல் பட்டதாரியான மறைமலை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். 

                  பின்னர் 2019 ல் ஸ்வேதா மற்றும் குடும்பத்தினரும் ரயிலில் பயணம் செய்யும் போது ராமச்சந்திரனிடம் பயக்கம் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும் ஆரம்பத்தில் நண்பர்களாக பேசி கொண்டு இருந்தார்கள். பிறகு போக போக காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வடலூர் , சென்னை போன்ற பல இடங்களை சுற்றி பார்த்தனர். இவர்கள் காதலித்து 2 வருடங்கள் ஆகின்றன. இதனையடுத்து  இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீர் என இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது.ஸ்வேதா ராமச்சந்திரனிடம் பல நாட்கள் சரியாக பேசயில்லை. இதனால் ராமச்சந்திரன் சந்தேகப்பட்டு ஸ்வேதா போனை வாங்கி பார்த்தார், அதில் ஸ்வேதா இன்னொரு நபரிடம் பேசி கொண்டு இருந்ததை அறிந்தார். அவர் பெயரை தோழி பெயராக சேவ் பண்ணி வைத்து இருந்தாள்.அந்த எண்ணிற்கு ராமச்சந்திரன் போன் பண்ணி விசாரித்தான்.அதற்கு அவர் ' நானும் ஸ்வேதாவும் நண்பர்களாக தான் பேசி வருகிறார் 'என்று கூறினார்.

               ராமச்சந்திரன் இதனை பற்றி பல முறை கேட்டும் , எந்தவொரு பதிலும் சொல்லாமல்  பிரித்து போக முயற்சி எடுத்தார்கள். அதனால் ராமச்சந்திரன் கடைசியாக ஒரு முறை பேச வேண்டும் என கூறி , ஸ்வேதாவை ரயில்நிலையத்திற்கு வர வைத்தார். பிறகு பேசியும் ஸ்வேதா கேட்கவில்லை.அதனால் ராமச்சந்திரன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்திலும் மார்பிலும் சரமாரியாக குத்தினார்.பிறகு அவரும் கத்தியால் தன் கழுத்தை அறுத்து கொண்டார்.

கருத்துகள்