நெதர்லாந்து நாட்டு பிரதமர் தனியாக சென்று காய்கறி வாங்கி செல்வதை , தமிழர் ஒருவர் வியப்படைத்து வீடியோவாக எடுத்துள்ளார்
பிரதமர் போய் தனியாக சென்று மார்க்கெட்டில் காய்கறி வாங்கி செல்வாரா? இது சாத்தியமா !
சாத்தியம் தான் ! நெதர்லாந்து நாட்டில் நடந்திருக்கிறது.
ஆனால் நம்ப நாட்டிலும் இல்லை, நம்ப கண்டத்திலுமே இல்லை . அப்புறம் எங்கே என்று கேட்க்கிறீர்களா.
நாம் ஆசியாவில் 49 நாடுகளில் , ஒரு நாட்டில் வசித்து வருகிறோம். அது தான் இந்தியா .
அதே போன்று ஆசியாவிற்கும் வடமேற்கு பகுதியில் ஐரோப்பா கண்டம் உள்ளது. ஐரோப்பா கண்டத்தில் 44 நாடுகளில் , ஒரு நாடாக நெதர்லாந்து இருக்கிறது.
மார்க் ருட்டே
நெதர்லாந்து நாட்டில் தமிழர் கணேஷ் வசித்து வருகிறார். அவர் உணவு விடுதி ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் அவர் ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி கொண்டு வருகிறார். அதில் அவர் அன்றாட வாழ்க்கை வீடியோவாக எடுத்து யூடியூபில் பகிர்வார். அதே போல ஒரு நாள் வீடியோ எடுத்து கொண்டு இருக்கும் போது , தற்செயலாக அந்நாட்டு பிரதமர் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கி செல்வதை பார்த்துள்ளார்.
கணேஷ் வியப்பாக பார்த்து ,அவரிடம் போய் பேசிகிறார் 'நான் தமிழன், இந்திய நாட்டைச் சேர்ந்தவர் 'எனவும் கூறியுள்ளார் . அதற்கு மார்க் ருட்டே அவர்கள் ' I love india ' எனவும் கூறியுள்ளார் , அதனையும் வீடியோவாக எடுத்து யூடியூபில் பகிர்ந்துள்ளார்.
பிறகு கணேஷ் வீடியோ எடுப்பதை அறிந்த மார்க் ருட்டே அவசரமாக கிளம்பி விட்டார்.
கருத்துகள்